சுவிற்சலாந்தில் ஒரு வியாபாரத்தை தொடங்குதல்...

- .நீங்கள் சுவிற்சலாந்தில் ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்க தயாராகிவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதலில் அந்த கம்பனிக்கு ஒரு பெயர் வேண்டும்
- முக்கியமாக சுவிற்சலாந்தில் ஒரு கம்பனியை தொடங்குதல் மற்றது தன்னிச்சையாக முழு சொந்தக்காரராக தொழில் புரிதல் கடைசியாக பலர் அடங்கிய பங்காளித்தன்மை என மூன்று வகை உண்டு.
- சுவிற்சலாந்தில் இதை மேற்கொள்ள கொஞ்சம் பணம் மற்றும் சில ஆவணவேலைகள் அத்துடன் உத்தியோகபுர்வ அங்கிகாரம் என்பன அவசியப்படும்
பெயரிடல்
வியாபாரத்திற்கு பெயரிடும் போது அது உத்தியோகபுர்வமாக அங்கீகரிக்ப்பட வேறு ஒருவராலும் உபயோகிக்காத பெயராக இருக்கவேண்டும். அல்லாவிடில் அது ஒத்த பெயராக இருப்பின் மறுக்கப்படும்.
தன்னிச்சையாக தொழில் படல் அல்லது பங்காளித்துவம்
இத்தகைய ஒரு தொழில் வியாபாரத்தினை ஆரம்பிக்க பதிவு செய்யும் போது 100000 சுவிஸ் பிராங்குகளுக்கு மேல் வருமானமாக வருடத்திற்கு ஈட்ட வேண்டும். குறைவாக இருப்பின் பதிவு முக்கியத்துவம் பெறாது.
தன்னிச்சை
இதன் படி உங்கள் பெயரில் இது மேற்கொள்ளப்படும். வியாபாரப்பெயரையும் இதில் இடலாம். அதிக அளவில் ஆவண வேலை இல்லாவிடினும் பதிவுப்படிவங்கள் தரப்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படை பதிவுக்கட்டணம் 120 சுவிஸ் பிராங்குகள் ஆகும். இது கன்டோனுக்கு கன்டோன் மாறுபடும்.
பங்காளித்துவம்
குறிப்பிட்ட சிலரால் ஒருங்கிணைந்து செயல்படும் தொழில் முறையே இதுவாகும். இது ஒரு பிரசித்த நொத்தாரிசு மூலம் மேற்கொள்ளலாம். இதற்கான பதிவுக்கட்டணம் 240சுவிஸ் பிராங்குகளாகும்.
கம்பனி
இது சுவிற்சலாந்தலி மிகவும் பெறுமதியான ஒரு பதிவு முறையாகும். இதற்கு கம்பனி பதிவுக்கும் பிரசித்த நொத்தாரிசு கட்டணமும் அதிக அளவில் இருக்கும். உள்நாட்டு மொழியிலேயே இதனை மேற்கொள்ள வேண்டும்.
GMBH
இதற்கு சுவிஸ் பிராங்குகள் 20000 முதலீடு செய்து உத்தியோகபுர்வமாக தொடங்கலாம். இதன் படி பங்குதாரர்கள் பொது பதிவில் பதியப்படுவர்.
இங்கு கம்பனியின் முக்கிய தொழில் விபரம், எவ்வாறு செயல்படுத்தப்படும், இயக்குனர்கள் நிதிநிலைமை, பங்குதாரர்களின் பங்குகள் மற்றும் பெறுமதி என்பன அடங்கும்.
AG
இதற்கு சுவிஸ் பிராங்குகள் 100000 முதலீடு எனினும் பதிவின் போது 50000 சுவிஸ் பிராங்குகள் செலுத்த வேண்டும். இதன் படி பங்கு தாரர்கள் மிகுதிப்பணத்திற்கு உடந்தையாக அமைவதுடன் ஏனைய சட்ட விதிமுறைகள் GMBH ஐ போன்றது.
கம்பனி பதிவு மேற்கொள்ளல்
இங்கு ஒரு இயக்குனராவது சுவிஸ் பிரஜையாக இருக்க வேண்டும். நீங்கள் வெளிநாட்டவராயின் சில நிறுவனங்கள் வதிவிட இயக்குனரை கோருவர். ஆனால் இது மேலதிக செலவுடன் அதிக நிர்வாக வேலையும் அடங்கும்.
இதற்குரிய பெடரல் கம்பனி பதிவுக் கட்டணம் 600 சுவிஸ் பிராங்குகளாகும்.
சமூக வரி, கட்டாய காப்புறுதி ஓடிட்டிங் வட் உள்நாட்டு இறைவரி வரி இவைகளை நிறுவனமோ அல்லது தன்னி்ச்சை. பங்காளித்துவ நிறுவனங்களே மேற்கொள்ள வேண்டும். இங்கு ஊழியர்களின் மேம்பாடு சம்பளம் பென்சன் காப்பீடு வரிகள் ஆகியன அடங்கும்.
வியாபார குறியீடு
உங்கள் வியாபார பொருள் அல்லது சேவையை நீங்கள் பாதுகாக்க விரும்பினால் அதற்கு ஒரு வியாபார குறியீட்டை தயாரித்து பதிவு செய்தல் வேண்டும். இதற்கு சுவிஸ் பிராங்குகள் 550 செலவாகும். ஒன்லைன் மூலமாகவும் மேற்கொள்ளலாம். இங்கும் இது வேறு எவராலும் பயன்படுத்தாததாக இருக்க வேண்டும்.
EasyGov
நவம்பர் 2017ல் சுவிஸ் பெடரல் அரசாங்கம் இந்த ஒன்லைன் சேவையை உருவாக்கியது. இதன் மூலம் கம்பனி பதிவு சில நிருவாகம் உதாரணமாக பதிவுகள், கோப்பிடல், வட் வரி கட்டுதல், மற்றும் சமூக வரி கட்டுதல் ஆகும். இதற்கு தனிப்பட்ட ஐடீ அவசியம்.
நிருவாகமும் கணக்கீடும்
தன்னிச்சையாக தொழில்படுவோர், பங்காளித்துவம் மற்றும் கம்பனிகள் தமது இலாபத்தினை ஒவ்வொரு வருடமும் வரையறுக்க வேண்டும். ஸ்பிரட் சீட் கொண்டு கணக்குகள் செய்யலாம்.



