இணையத்தினூடாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது
#Arrest
#Police
Prathees
4 years ago
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இணையத்தின் ஊடாக விளம்பரப்படுத்தி பாலியல் தொழிலை முன்னெடுத்து வந்த இடமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கொட்டாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, கொட்டாவ பகுதியில் உள்ள வாரச்சந்தைக்கு அருகில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 4 பெண்கள் மற்றும் அங்கிருந்த ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 30 - 37 வயதுக்கு இடைப்பட்ட மத்துகம, பலாங்கொடை, பாதுக்கை, பெலிவுல்ஓயா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் சந்தேக நபர்களை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.