சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து

#Covid Vaccine #SriLanka
Prasu
4 years ago
சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு விசேட வைத்திய நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ள Tocilizumab என்ற தடுப்பூசிகளை, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மருந்து 10 முதல் 12 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்து வந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மோசடி கண்டறியப்பட்டது.

போலியான முறையில் துருக்கியில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசிகள் சுவிட்ஸர்லாந்தின் ரோஜா என்ற பிரபல நிறுவனத்தினால் பதிப்புரிமை பெற்றுள்ளது. இந்த தடுப்பூசிகள் இந்தியாவில் உள்ள கடத்தல்காரர்களால் கொண்டுவரப்பட்டமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 7 தொடக்கம் 10 இலட்சம் ரூபா வரையில் தரகர்களின் ஊடாக விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!