பிரித்தானியாவில் சாலையோரத்தில் பிரசவம் பார்த்த பொலிஸார்கள்

அவசரபிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர்கள் மியா கேர், டொம் பார்மர், கிர்ஸ்டி ரொபர்ட்ஸ் மற்றும் அலி மியா ஆகியோர் ஒரு தம்பதியனரின் குழந்தைப்பிரசவத்தை இலண்டன் அம்புலன்ஸ் வரும்வரை பார்த்துள்ளனர்.
உத்தியோகத்தர் கேர் மற்றும் பார்மர் சௌத்வேக்ல் தமது கடமையில் இருந்த போது அவர்களுக்கு தந்தையாகவிருக்கும் மார்கோ டி காலியால் ஒரு சமிஞை அனுப்பப்படுகிறது.
அவர் அதில் தனது மனைவி குழந்தையை அருகில் பிரசவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். அப்போது கெர் அதனை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவிட்டு பார்மருடன் உதவிக்கு சென்றார். சிறிது நேரத்தில் வந்து சேர்ந்த உத்தியோகத்தர் ரொபட்ஸ் மற்றும் மியாவும் இவர்களுக்கு உதவினா்.
இந்த குழுவானது கம்பளியால் பிரசவத்தை மூடி பொதுப்பார்வையை தடுத்தனர். தொலைபேசி வழியாக இலண்டன் அம்புலன்ஸ் சேவை தொடர்பு கொள்ளப்பட்டு ரொபர்ட்ஸ் மூலம் குழந்தை சுகப்பிரசவம் அடைந்தது.
பொலிஸ் முதலுதவி கம்பளிகளால் குழந்தை போர்க்கப்பட்டு சிறிது நேரத்தில் வந்த அம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.
இவர்கள் இன்று குழந்தை மற்றும் பொற்றோரை சந்தித்து அவர்களிடம் இருந்து என்றும் மறவா நன்றியை பெற்றுக்கொண்டனர்.



