பிரித்தானிய கால்பந்து வீரர்கள் மீது இனப்பாகுபாடு செய்த நபர் சிறையில்...

யூரோ 2020 கால்பந்தாட்ட இத்தாலியுடனான இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த காரணத்திற்கான மூன்று பிரித்தானிய கறுப்பின வீரர்களை இனவெறி பாகுபாடு செய்த நபர் 14 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்காட் மெக்கலஸ்கி (Scott McCluskey) எனும் அந்த 43 வயது நபர், தன செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டது.
சமூக இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த கறுப்பினத்தவர்களான Marcus Rashford, Jadon Sancho மற்றும் Bukayo Saka ஆகியோரை சுட்டிக்காட்டி இனவெறி தாக்குதலில் ஈடுப்பட்டு பின்னர் அவர்களுக்கு எதிராக சமூக வலைதங்களில் இனரீதியான துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சுமார் 11 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
ஸ்காட் மெக்கலஸ்கி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், இறுதிப்போட்டி நடந்த இரவில், தான் கஞ்சா போதையில் இருந்ததாகவும், மக்களை சிரிக்க வைக்கும் வகையில் இருக்கும் என நினைத்து இந்த கருத்துகளை பதிவிட்டதாகவும் பொலிஸாரிடம் கூறினார்.
இந்தநிலையில், நேற்று அவருக்கு, 14 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, 18 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டது.



