யாழில் அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிட்ட நாமல்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று மதியம் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும்ட அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட்டார்.
நாமல் ராஜபக்ஷ அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திற்கான அவரது விஜயம் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கில் அமைந்தது.
அந்தவகையில், சென் பொஸ்கோ பாடசாலை அருகில் புனரமைக்கப்பட்டுவரும் குளம், ஐ திட்ட வீதியையும், ஆஸ்பத்திரி வீதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டம், யாழ். மாநகர சபை புதிய கட்டடம் என்பவற்றை அமைச்சர் நாமல் பார்வையிட்டார்.
இதன் போது யாழ்மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் எம்.பியுமான அங்கஜன் இராமநாதன், எம்.பி.சுரேன் ராகவன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீத்நாத் காசிலிங்கம் , யாழ் மாநகர மேஜர் மணிவண்ணன், யாழ்ப்பாண பிரதேச செயலர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தற்போதைய அரசாங்கமானது கொரோனா வைரஸ் என்ற தடையையும் தாண்டி அதனை கட்டுப்படுத்தும் வேலைத் திட்டத்தோடு இந்த அபிவிருத்தி பணிகளையும் அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
வடக்கு - கிழக்கு - தெற்கு என்று பார்க்காது அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் வடக்கு - கிழக்கு பகுதிகளில் அதிக அளவிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர் அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.



