பிரான்ஸிலிருந்து சென்ற அகதிகள் படகு திரும்புகின்றன.
#world_news
Mugunthan Mugunthan
4 years ago

பிரான்ஸிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக சென்ற 56 அகதிகள் மீட்கப்பட்ட சம்பவம் லங்கா 4 நேர்கள் நேற்று அறிந்திருப்பீர்கள். அந்த விடயம் சம்பந்தமாக மேலதிக தகவல் எமக்கு இன்று கிடைத்துள்ளது.
நாளுக்கு நாள் பிரான்சில் இருந்து பிரித்தானியா வரும் படகுகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடலில் படகை கண்டால் அப்படியே பிரான்ஸ் நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு, பிரித்தானிய உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் கட்டளை பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கடலோர காவல் படைக்கு பிரீத்தி பட்டேல் இந்த கட்டளையை பிறப்பித்துள்ளதோடு. பிரான்ஸ் நாட்டின் கடல் கரை நகரமான கலையில், ஒரு முகாமை அமைத்து, அங்கே அகதிகளை கொண்டு செல்வது என்ற திட்டம் தற்போது தீட்டப்பட்டுள்ளது. என மேலும் அறியப்படுகிறது.



