கனடா- டொரொன்டோ நகரில் ஆலை விபத்தில் ஒருவர் பலி!

#world_news
கனடா- டொரொன்டோ நகரில் ஆலை விபத்தில் ஒருவர் பலி!

கனடா - ரொறன்ரோவில் உள்ள இரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஊழியர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார் இதில் இன்னொருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை பகல் 10 மணியளவில் குறித்த விபத்து தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாகவும், இன்னொருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு Sunnybrook மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பலர் இலேசான காயங்களுடன் தப்பியதாகவும்  அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்ட தகவலில், குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கும் பொருட்டு அதிகாரி ஒருவரை நியமித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!