அரசிடம் ஒப்படைக்கப்பட்ட 1000 மெற்றிக் தொன் அரிசி மூடைகள்

#SriLanka #rice #government
Yuga
4 years ago
அரசிடம் ஒப்படைக்கப்பட்ட 1000 மெற்றிக் தொன் அரிசி மூடைகள்

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பெரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் அரிசி களஞ்சியசாலைகளை சோதனை செய்த அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்ல தலைமையிலான குழுவினர், அந்த கிடங்குகளில் இருந்து கிட்டத்தட்ட 1,000 மெற்றிக் தொன் அரிசியை கைப்பற்றியுள்ளனர்.

அரசால் விதிக்கப்பட்ட விலையில் அரிசி சந்தைக்கு வழங்கப்படாததால், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

சதொச மற்றும் உணவுத் திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 70 லொறிகள் பொலன்னறுவைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கைப்பற்றப்பட்ட அரிசி கையிருப்பு, இன்று மதியம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாகவும் சதொச மூலம் விற்பனை செய்யவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!