இன்றைய சுவிஸ் செய்திகளின் தொகுப்பு 09.09.2021 (VIDEO)

சுவிஸ்சர்லாந்தில் மகுட நுண்ணித்தொற்று பற்றிய தகவல்
சுவிற்சலாந்தில் செப்டம்பர் 7ம்திகதி முடிவடைந்த 24 மணி நேரத்தில் வைத்தியசாலை தீவிர சிகிச்சைப்பிரிவில் 288 பேர் அனுமதியில் இருந்தனர். அன்று 4 மரணங்கள் சம்பவித்தன.
சுவிற்சலாந்தில் பெப்ரவரியிலிருந்து ஏப்ரல் 2021 வரையிலான காலப்பகுதியில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிரகரித்த வண்ணம் இருந்தது, காரணம் டெல்டா வைரஸின் தீவிரம் ஆகும்.
முதலாவது கன்டோன் தடுப்பூசி செலுத்தும் பணி டிசம்பர் 2020 கடைசியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அன்று தொடக்கம் அரசாங்கம் சனத்தொகையில் 70வீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டுள்ளது.
சுவிற்சலாந்தில் தடுப்பூசி ஏற்றுதல் அவரவர் இஷ்டம் என்றாலும் திட்டமானது நாளுக்கு 70000 தடுப்பூசி செலுத்துதல் ஆகும். பெடரல் பொது சுகாதார அலுவலகம் 12-15வயதினரும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள பரிந்துரைசெய்துள்ளது.
விரிவான செய்திகளை வாசிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்>>>
- சுகாதார மற்றும் உதவி ஊழியர்களின் எண்ணிக்கை 2029 க்குள் மேலும் 70,000 பேர் தேவைப்படுவர் சுவிஸ் சுகாதார ஆய்வகம் தெரிவிப்பு
- ஊழியர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் 4000CHF வழங்க தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை
- மிக்ரோஸ் வாடிக்கையாளர்கள் பிட்காயின் மோசடிக்காரர்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
- சுவிஸ் ஸ்டாட் அப் விருதுகள் விழாவில்முதலாம் இடத்தினை தட்டிக்கொண்ட இரசயானங்களைப் பயன்படுத்தாது உற்பத்தி செய்யும் நிறுவனம்
மேலதிகமான செய்திகளை பார்வையிட கீழே உள்ள வீடியோவில் லிங்கை கிளிக் செய்யவும்>>>



