டொரொன்டோ ஸ்காபொரோவில் இரட்டைக்கொலை!

#world_news #Murder #Canada
டொரொன்டோ ஸ்காபொரோவில் இரட்டைக்கொலை!

டொரொன்டோ பொலிஸார் ஸ்காபொரோவில் கடந்த வார இறுதியில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர்.

கொலையுண்டவர்கள் லினிட் சிகுய்ரா வயது 65 மற்றும் பிரான்ஸிஸ் சிகுய்ரா வயது 68 ஆகும். இவர் டொரொன்டோவைச் சேர்ந்தவர்கள். லினிட்டின் கொலை டொரொன்டோவில் 56வதும் பிரான்ஸிஸினது 57வது மாகும். 

ஞாயிறன்று மாலை 8 மணிக்கு சற்று முன் பொலிஸாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு அறியாதவர் ஒருவர் மூலம் வந்துள்ளது. அதன் படி 15 பின் லேன், ஸ்காபொரோவில் உள்ளது. அங்கு இனம் தெரியாத பிரச்சினை ஒன்று உருவாகுவதாக அறிவி்க்கப்பட்டிருந்தது.செய்தியறிக்கையின் படி பொலிஸார் அவ்வீட்டிற்கு சோதனைக்காக சென்ற போது மயக்க நிலையைப்போன்று இரு உடல்கள் கிடந்தன.

கில் சிகுய்ரா வயது 26 டொரொன்டோவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் இவர் இந்த தம்பதியினரின் மகன் ஆவார். இவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது இருப்பினும் ஏற்கனவே இவர் மீது மற்றுமோர் கொலைக்குற்றமுமாக இது இரண்டாவது கொலையாக நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் தொடருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!