சன்சைன் சுத்தா கொலை: சந்தேக நபர் ஒருவர் கைது
#Arrest
#Police
Prathees
4 years ago

முன்னணி போதைப்பொருள் விற்பனையாளராகக் கருதப்படும் சன்சைன் சுத்தா என அழைக்கப்படும் அமில பிரசன்னவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ´ஹரக் கட்டா´ என்று அழைக்கப்படும் பாதாள உலக குழு உறுப்பினரின் உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
வெலிகம, உடுகவ பிரதேசத்தில் வைத்து அவர் இன்று (09) காலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 3 ம் திகதி நண்பகலில் கொட்டவில வரகாப்பிட்டிய பாடசாலைக்கு அருகே காரில் பயணம் செய்தபோது 'சன்ஷைன் சுத்தா' சுட்டுக் கொல்லப்பட்டார்.



