ஆசிரியர்கள் அதிபர்களை அச்சுறுத்த முயற்சிக்கின்றது அரசாங்கம் ?
#Sri Lanka Teachers
#government
#Police
Yuga
4 years ago
சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு பதிலாக, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை பொலிஸாரின் ஊடாக அரசாங்கம், அச்சுறுத்துவதற்கு முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அந்த சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஹொரணை, இங்கிரிய, மாதுராவல, மில்லனிய பிரதேச செயலாளர்களின் ஊடாக, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அதிபர்களின் தகவல்களை, ஹொரணை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் கோரியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.