மட்டக்களப்பில் 11 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்கு விளக்கமறியலில்
#Court Order
#Batticaloa
#Police
Prathees
4 years ago
மட்டக்களப்பில் 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட பிக்குவை எதிர்வரும் 22 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை அவ்விகாரையின் பிரதமபிக்கு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த மாதம் 25 திகதி பொலிஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது கொரோனா காரணமாக அவரை நீதிமன்றில் அழைத்துவரப்படாத நிலையில் காணொளி மூலம் அவரை எதிர்வரும் 22 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.