இலங்கையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி தொடர்பில் வெளிவந்துள்ள உண்மைத்தகவல்!
#SriLanka
#Earthquake
Yuga
4 years ago
ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹெர நீர்த்தேகத்திற்கு அருகில் நேற்று உணரப்பட்ட நில அதிர்வு தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம் நாட்டின் நிலப்பரப்பிற்குள் ஏற்பட்டதல்லவென பேராதனை பல்கலைகழகத்தின் புவியியல் தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த நில அதிர்வானது சுமத்ரா தீவு பகுதியிலேயே ஏற்பட்டுள்ளது.
அந்த சந்தர்ப்பத்தில் உலக நாடுகளில் ஏற்பட்ட நில அதிர்வுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்குள் எந்தவொரு நில அதிர்வும் ஏற்பட்டிருக்கவில்லை எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் தொடர்பான சிரேஸ்ட பேராசிரியர் அதுல சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
லுணுகம்வெஹேர பகுதியில் நேற்று முற்பகல் 2.4 மெக்னிடியுட் அளவிலான நில அதிர்வொன்று உணரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.