மாணவியை ஆசைவார்த்தையால் சீரழித்த கனடா ஆசிரியர்
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
கனடாவின் Saskatchewan என்ற இடத்தில் உயர்தர வகுப்பு ஆசிரியர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி மாணவியை சீரழித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் 49 வயதான குறித்த ஆசிரியரை ரெஜினா நகர பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவர் மீது பாலியல் அத்துமீறல், உடல் ரீதியாக ஆதாயம் தேடுதல் உள்ளிட்ட குற்றச்சாடுகளை பதிவு செய்துள்ளனர்.
தொடர்புடைய ஆசிரியருக்கும் அந்த மாணவிக்கும் இடையேயான பொருத்தமற்ற உறவு அல்லது தொடர்பு குறித்து வியாழக்கிழமை தங்களுக்கு தெரிய வந்ததாக ரெஜினா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்பில் அறிக்கை சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.