இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இன்று முதல் விசேட வரி
#taxes
#onion
Yuga
4 years ago
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா இறக்குமதி வரியை அறவிட தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இந்த வரி அறவீடும் நடவடிக்கை இன்று (07) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு, 40 ரூபாய் இறக்குமதி பொருள்களுக்கான விசேட தீர்வையாக அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று (6) இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பிலேயே, இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய பெரிய வெங்காய உற்பத்தி போதியளவு சந்தைகளில் கிடைத்து வரும் நிலையில், தேசிய உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.