அமெரிக்க - இந்தியா பாதுகாப்புத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நவம்பரில் நடைபெறும்.
#world_news
#Meeting
Mugunthan Mugunthan
4 years ago
அமெரிக்க -இந்தியா வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்கும் டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறும் என வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் உயர் அதிகாரிகள், வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடன் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது நவம்பரில் இருநாடுகளுக்கு இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தேதிகள் இன்னும் முடிவாகவில்லை என ஷ்ரிங்லா தனது அமெரிக்க பயணத்தின் போது கூறினார்.
2+2 இன் கடைசி கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. அடுத்த சந்திப்பு அமெரிக்காவால் நடத்தப்பட உள்ளது.