விறகு வெட்ட தாயுடன் காட்டுப்பகுதிக்கு சென்ற யுவதி மாயம்
தனது தாயுடன் வனப்பகுதிக்கு விறகு எடுப்பதற்காகச் சென்ற 25 வயது யுவதி காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல்போன யுவதியைத் தேடுவதற்காக இராணுவமும் காவல்துறையும் குறித்த காட்டுப்பகுதியில் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியாவில் உள்ள டன்சினன் காட்டுப்பகுதிக்கு விறகு வெட்ட தனது தாயுடன் சென்ற 25 வயது பெண்ணே காணாமல் போயுள்ளார்.
நேற்று காலை 9.30 மணியளவில் டன்சினன் தோட்டத்திற்கு மேலே உள்ள டன்சினன் காட்டுப் பகுதிக்கு மகளுடன் சென்றதாகவும் அப்போது தனது மகள் மலை உச்சிக்கு தனியாக சென்றதாகவும் கீழே மீண்டும் திரும்பி வரவில்ல எனவும் காணாமல் போன யுவதியின் தாயார் எஸ்.மனோவாணி தெரிவித்துள்ளார்.
தனது மகள் பிற்பகல் 2 மணி வரை வரவில்லை என்று அண்டை வீட்டாருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்ததாகவும்இ அதனையடுத்து நேற்று மாலை முதல் குறித்த காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை தொடங்கியதாகவும் தாய் தெரிவித்துள்ளார்.