மூன்றரை அடி உயரமான கஞ்சா செடிகளை வளர்த்த 4 இளைஞர்கள் கைது
#Arrest
#Police
#NuwaraEliya
Prathees
4 years ago
கஞ்சா செடிகளை வளர்த்த 4 இளைஞர்களை கந்தப்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நுவரெலியா – கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெத்துன்கம மாவத்தையைச் சேர்ந்த குறித்த இளைஞர்கள் தண்ணீர் தாங்கி ஒன்றுக்கு அருகில் கஞ்சா செடி வளத்தமை பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கந்தப்பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமையஇ குறித்த இளைஞர்களின் வீட்டுப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தியபோது மூன்றரை அடி உயரமான இரண்டு கஞ்சா செடிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்களை நுவரெலியா மாவட்ட நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.