அரசாங்கப் பணத்திலிருந்து 500 இலட்சம் மதிப்பிலான சொகுசு வாகனத்தை வாங்கிய ஆளுநர்!
#SriLanka
#government
#luxury vehicle
Yuga
4 years ago
மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ. டி லக்ஷ்மன் அரசாங்கத்தின் பணத்திலிருந்து 500 இலட்சம் ரூபா மதிப்பிலான சொகுசு வாகனமொன்றை இறக்குமதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அஜித் பி. பெரேரா தனது முகநூலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
டொலர் நெருக்கடி மற்றும் வாகன இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இந்த இரகசிய இறக்குமதியை செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.