இலங்கையில் மற்றுமொரு வைத்தியரும் கொரோனாவுக்கு பலியான சோகம்!
#SriLanka
#Covid 19
#Death
Yuga
4 years ago
ஆனமடுவ சுகாதார பிரிவின் மேலதிக மருத்துவ அதிகாரியான வைத்தியர் வசந்த ஜயசூரிய கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
கடவத்தையில் வசிக்கும் இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சில காலம் பணியாற்றி வந்த ஜெயசூர்ய, பின்னர் ஆனமடுவ சுகாதார அலுவலர் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டார்.
மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சுமார் 10 நாட்கள் IDH கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.