சுவிற்சலாந்து கொவிட் நிலைமைகள்
Mugunthan Mugunthan
4 years ago
கடந்த 31ம் திகதி சுவஸில் 1673 கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டனர். இதில் 876 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் இறந்துள்ளார்.
கொவிட் தடுப்புசி ஏற்றாதவர்கள் தொற்றுக்குள்ளானால் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட மறுக்க வேண்டும் என சூரிச் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். எவரும் தடுப்புசி பெற மறுப்பாராயின் அவர் குறிப்பிட்ட படிவத்தினை நிரப்பி தரவேண்டும் . நான் கொவிட் தொற்றுக்குள்ளானேனால் வைத்தியசாலை அனுமதி மறுக்கலாம் என்ற விதத்திலாகும். இவ்வாறு இவர் மேலும் தெரிவித்தார்.
இந்த கருத்தானது மவ்ரொ போகியா வின் கருத்துக்கு உடன் படுவதாக இருக்கிறது. இவர் தடுப்புசி பெற மறுப்போர் தொற்றுக்குள்ளானால் அவர்கள் வைத்தியசாலை செலவின் குறிப்பிட்ட வீதத்தினை செலத்துதல் வேண்டும் என்பதாகும்.