அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்கிறது....
#SriLanka
#Sri Lanka Teachers
#strike
Yuga
4 years ago
அமைச்சரவை என்ன காரணம் கூறினாலும் தாம் போராட்டத்தை முன்கொண்டு செல்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம்(01.09.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சம்பளப் பிரச்சினை விடயத்தில் நிதி அமைச்சரோ, ஜனாதிபதியோ தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தித் தீர்வு காண வேண்டும் எனவும் ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் சார்பில் அவர் வலியுறுத்தியுள்ளார்.