602 போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது
#Arrest
#Investigation
Prathees
4 years ago
602 கள்ள நோட்டுகளுடன் மூன்று பேரை சிறப்பு அதிரடிப்படை கைது செய்துள்ளது.
நேற்று சீதுவ மற்றும் வீரகுல பொலிஸ் பிரிவுகளில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏக்கல, பன்சலவீதி, சீதுவ, லியனகே முல்லை மற்றும் அங்கம்பிட்டிய ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் சோதனை செய்தபோது அவர்களிடமிருந்த ரூ .500.00 மதிப்புள்ள 60 போலி நாணயத் தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதன்பின்னர் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரூ .500.00 மதிப்புள்ள 542 போலி நாணயத்தாள்கள் மற்றும் போலி நாணயத் தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்படும் மடிக்கணினி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.