இந்திய-இலங்கை விமான சேவை ஆரம்பம்
#SriLanka
#India
#Airport
Prathees
4 years ago
இந்தியா மற்றும் இலங்கை இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய அட்டவணையின்படி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூருக்கு வாரந்தோறும் நான்கு தடவைகள் விமானங்கள் இயக்கப்படும் என இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
மேலும் மதுரை திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம் மற்றும் கொச்சின் இடையே விமானங்கள் வாரத்திற்கு ஒரு முறை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத், புது டெல்லி மற்றும் கொழும்பு இடையே இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை விமானங்கள் இயக்கப்படும் என இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பில் இருந்து நேபாளத்தின் காத்மாண்டுக்கு விமானங்கள் நாளை (31) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளன.