5 துப்பாக்கிகளுடன் நபரொருவர் கைது
#Arrest
#Police
Prathees
4 years ago
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 துப்பாக்கிகள், 22 தோட்டாக்கள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் ரம்புக்கான பகுதியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட 37 வயதான சந்தேக நபர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.