பிரிட்டனில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா
#Corona Virus
Keerthi
4 years ago
கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பிரிட்டனில் 80 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 38 ஆயிரத்து 46 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 7நாட்களில் மட்டும், அதாவது ஜூலை 20 முதல் 26ஆம் தேதி வரை 2 லட்சத்து 39 ஆயிரத்து 237 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஜூலை 19ஆம் தேதி முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டதே கொரோனா அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.