நேற்றைய தினம் 212 பேர் இலங்கையில் உயிரிழப்பு
#Corona Virus
#Covid 19
#Covid Vaccine
#Covid Variant
#Death
#SriLanka
Nila
4 years ago
இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா உயிரிழப்புக்கள் அதிகரித்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் 212 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு இறந்தவர்களுள் 30 வயதிற்குட்பட்டவர்கள் இருவரும்,
30 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களுள் 37 பேரும்,
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 173 பேரும் என 212 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 103 பெண்களும் 109 ஆண்களும் உள்ளடங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரையில் மொத்தமாக 8583 பேர் கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
