சுவிற்சலாந்தில் பெரிய அளவிலான ஓட்டப்போட்டி....
Mugunthan Mugunthan
4 years ago
சுவிட்சர்லாந்தில் சுமார் இரண்டாயிரம் போட்டியாளர்கள் பங்கேற்ற ஓட்டப் போட்டியொன்று பரீட்சார்த்த அடிப்படையில் நடாத்தப்பட்டுள்ளது.
கொவிட் பெருந்தொற்று தாக்கத்திற்கு மத்தியில் ஐரோப்பிய வலயத்தில் நடைபெற்ற மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக இந்த நிகழ்வு கருதப்படுகின்றது.
மேற்கு சுவிட்சர்லாந்தின் Couvet ல் இந்தப் போட்டி நடாத்தப்பட்டுள்ளது.
போட்டி ஆரம்பிக்கப்பட்ட போது அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்ததுடன் 300 மீற்றர் ஓடியதன் பின்னர் அதனை அகற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
போதியளவு சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் இந்தப் போட்டி நடாத்தப்பட்டுள்ளது.