தனிமைப்படுத்தல் ஊரடங்குக்கு மத்தியில், மகிழ்ச்சியாக கருத்து வெளியிட்ட இராணுவ தளபதி
#SriLanka
#Curfew
#Corona Virus
#Covid 19
Yuga
4 years ago
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியில், பொது மக்களின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
மக்களின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாகவும், அதற்காக தான் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
இதேவேளை, வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றை முழுமையாக மூடும் வகையில், முகக்கவசத்தை பொதுமக்கள் அணிவார்களாயின், நாடு முழுவதையும் பாதுகாப்பது சிரமமானது கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.