யப்பானில் எதிர்க்கட்சி வேட்பாளர் முதல்வாரக தெரிவு!
Mugunthan Mugunthan
4 years ago
யப்பானில் யோக்கோஹாமா நகரின் முதல்வராக எதிர்க்கட்சியை சேர்ந்த ஒரு முன்னாள் பேராசிரியர் ஆளும் கட்சி வேட்பாளரை தோற்கடித்துள்ளார். இதனால் ஆளும் கட்சி பிரதமருக்கு பெரும் பின்னடைவை இது எதிர்வரும் மாதங்களில் வரவிருக்கும் பொது தேர்தலில் ஏற்படுத்தலாம் என நம்பப்படுகிறது.
யோக்கோஹாமா, கனகவா மாகாணத்தின் தலைநகருடன் நாட்டின் அதிகூடிய சனத்தொகையில் இரண்டாம் இடத்தை பெறுகிறது. இந்த ஆளும் கட்சியின் தோல்வி மக்கள் மத்தியில் அதற்கான ஆதரவு குறைவாவதை எடுத்துக்காட்டுகிறது.
48 வயது நிரம்பிய யமானக்கா என்ற இந்த முதல்வர் அரச அனுபவம் இல்லாதவர். கொவிட் விஞ்ஞானியாக இருக்கும் இவர் கொடூர வைரஸ் காரணமாக அரசாங்கத்திற்கு கொடுக்கும் முறைப்பாடுகளை இவர் ஆதரித்து வந்துள்ளார். இது தொடர்பாக அரசாங்கத்தின் கேளாத்தன்மையை இவர் பெரிதும் விமர்சித்தும் உள்ளார்.