அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் ஆசிரியர் சங்கம்
#Sri Lanka Teachers
#SriLanka
#School
Yuga
4 years ago
தமது சம்பள பிரச்சினைக்கு நேற்றைய தினம் (23) கூடிய அமைச்சரவையில் உரிய தீர்வு எட்டப்படவில்லை என்றால், எதிர்வரும் நாட்களில் வலுவான தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு செல்லவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.
தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆசிரியர்கள் மீது சமூக வலைத்தளங்களின் ஊடாக, பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முயற்சித்து வருவதாகவும் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிடுகின்றார்.