இலங்கையை வந்தடைந்த மேலுமொரு தொகை தடுப்பூசிகள்
#SriLanka
#Covid Vaccine
#Covid 19
Yuga
4 years ago
இலங்கைக்கு சுமார் 80,000 பைஸர் தடுப்பூசி தொகுதி கிடைக்கப்பெற்றுள்ளன.
மேலும் அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளது.
அத்தோடு இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து 18 – 30 வயதுக்குட்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.