முகக்கவசம் விற்பனை செய்வதாகக் கூறி ஐஸ் போதைப்பொருள் விற்ற 15 பேர் கைது
#Arrest
#Police
Nila
4 years ago
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 25 வயதுடைய இரு யுவதிகள் உட்பட 15 பேரை சபுகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முகக்கவசம் விற்பனை செய்வதாகக் கூறி சந'தேக நபர்கள் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 50 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருட்களையும் அவற்றை விற்பனை செய்து சம்பாதித்த மேலும் 700,000 ரூபாயையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.