போக்குவரத்து சேவை தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு!
Keerthi
3 years ago

இலங்கையில் நாளை முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடாதென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்கு பயணிப்பவர்களுக்காக நிறுவனங்களின் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்தால் மாத்திரம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டத்தை அமுல்படுத்துமாறும், ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



