உயிராபத்தான எதிர்ப்பால் ஜலாலலபாத்தில் குறைந்தது 3 பேர் தலிபான்களால் கொல்லப்பட்டனர்!
Mugunthan Mugunthan
4 years ago
ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத்தில் தேசியக்கொடியை நீக்கி தலிபான்கன் தமது கொடியை ஏற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை நோக்கி அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் குறைந்த பட்சம் மூவர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.
இந்நிகழ்வை செய்தியாக்க சென்ற உள்நாட்டு நிறுவனத்தின் செய்தியாளரும் கடுமையாக தாக்கப்பட்டார்.
இதே வேளை நாட்டில் இருந்து வெளியேறுவேரை ஏற்றிச்சென்ற விமானம் பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் மேற்குலக நாடுகளை சென்றடைந்தது. தலிபான்கள் பொதுமன்னிப்பு , சுதந்திரம் இஸ்லாமிய கட்டமைப்புக்குள் பெண்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும், அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் வழங்கவுள்ளது நீங்கள் அறிந்ததே.