வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரனுக்கு கொரோனா
#SriLanka
#NorthernProvince
#Jaffna
#Corona Virus
Yuga
4 years ago
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தார்.
இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.