இலங்கையில் அமுலுக்கு வரும் தடை! அரசாங்கம் வெளியிட்ட விசேட அறிவித்தல்
#SriLanka
Yuga
4 years ago
இலங்கையில் வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை ஹோட்டல்களிலோ அல்லது மண்டபங்களிலோ நடத்த இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று நள்ளிரவு முதல் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை.
உணவகங்கள் ஒரே நேரத்தில் 50% மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொது இடங்களுக்கு முடிந்தவரை வருவதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.