கொவிட் மூன்றாவது அலை, பலியெடுத்த 5,011 உயிர்கள்
#Covid 19
Nila
4 years ago
இலங்கையில் கொவிட் மூன்றாவது அலையின் தாக்கம் மிக வீரியத்தை கொண்டதாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தடவையாக பரவிய கொவிட் முதலாவது அலையினால் 13 பேர் மாத்திரமே உயிரிழந்திருந்தனர்.அதனைத் தொடர்ந்து, ஃப்ரண்டிக் ஆடைத் தொழிற்சாலையின் மூலம் பரவ ஆரம்பித்த கொவிட் 2வது அலை காரணமாக 596 பேர் உயிரிழந்திருந்தனர்.மேலும், புதுவருட பிறப்பு கொத்தணியின் ஊடாக பரவ ஆரம்பித்த மூன்றாவது அலையினால் நேற்று வரை 5,011 பேர் உயிரிழந்துள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.இலங்கையில் கொவிட் தாக்கம் காரணமாக இதுவரை 5,620 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த வாரம் முதல் கொவிட் உயிரிழப்பு விதம், வெகுவாக அதிகரித்திருந்தது.நேற்று முன்தினம் (11) கொவிட் தொற்று காரணமாக 156 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.