மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு - களமிறங்கிய முப்படையினர்
#SriLanka
Reha
4 years ago
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண எல்லைகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் ஒத்துழைப்புக்கு முப்படையினர் தேவை என கருதப்படும் இடங்களில் முப்படையினர் நேற்று முதல் கடமைகளில் ஈடுபடுத்தப்படுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படும் கொரோனா நிலைமைக்கு மத்தியில், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.