ஜேர்மனியில் தொடரும் வெள்ளம் - இதுவரையில் 44 பேர் உயிரிழப்பு

Nila
4 years ago
ஜேர்மனியில் தொடரும் வெள்ளம் - இதுவரையில் 44 பேர் உயிரிழப்பு

ஜேர்மனியில் தொடரும் வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுமாறு நிதி மற்றும் உள்விவகார அமைச்சுக்களுக்கு சான்சலர் என்கலா மேர்க்கல் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வொஷிங்டனில் இருக்கும் என்கலா மேர்கல் தனது நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல நாடுகள் உதவி வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேற்கு ஐரோப்பாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 என்பதுடன் இதில் 42 உயிரிழப்புகள் மேற்கு ஜேர்மனியில் பதிவாகியுள்ளது.

கரைக்கடந்த ஆற்றுநீர் பல வீடுகளை முற்றாக மூழ்கடித்து விட்டன.

இதேவேளை பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இவற்றை அகற்றும் பணிகளில் பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டு வரும் நிலையில் காணாமற் போனோரும் தேடப்பட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்குண்டோரை காப்பாற்றுவதற்காக ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் வெள்ளத்தில் உயிரிழந்த மற்றும் காணாமற்போன குடும்பங்களும் தமது கவலையை சான்சலர் என்கலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.வொஷிங்டனில் இருந்தாலும் தனது மக்கள் குறித்த கவலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்க பெல்ஜியத்திலும் 10 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் ஆயிரம் வீடுகளில் இருந்தான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த  மழையுடனான காலநிலை பொது போக்குவரத்தை பெரிதும் பாதித்துள்ளது.

இவ்வாறிருக்கையில் மேற்கு ஜேர்மனியில் சுமார் 200,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!