கொவிஷீல்ட் செலுத்திக்கொண்டவர்களை விமானத்தில் ஏற்ற மறுப்பு

Nila
4 years ago
கொவிஷீல்ட் செலுத்திக்கொண்டவர்களை விமானத்தில் ஏற்ற மறுப்பு

மோல்டாவுக்கு பயணிக்கவிருந்த பிரித்தானிய தம்பதியினர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஸ்டீவ் ஹர்டி மற்றும் க்லென்டா ஹார்டி ஆகிய இருவருக்கு இந்திய தயாரிப்பிலான அஸ்ரஸெனெக்கா கொவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டதால் இவர்கள் மன்ஞ்சஸ்டர் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோல்டாவில் உள்ள தனது மகனை பல வருடங்கள் காணாத பெற்றோருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய தயாரிப்பிலான அஸ்ரஸெனெக்கா கொவிஷீல்ட் ஐரோப்பிய  ஒன்றிய மருத்துவ பிரிவினால் அங்கீகரிக்கப்படவில்லை.அதனால் ஐரோப்பிய ஒன்றிய கடவுச்சீட்டு திட்டத்தில் இது சேர்க்கப்படவில்லை.

மார்ச் மாதம் இவர்கள் கொவிஷீல்டை செலுத்திக்கொண்டுள்ளனர்.அறிவிக்கப்படாமல் மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அஸ்ரஸெனெக்கா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளதாக த டெலிகிராப் தெரிவித்துள்ளது.

தமக்கு எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறித்து அறிந்திருக்கவில்லை என தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தை தாம் நம்பியதாகவும் நாட்டில் இந்திய தடுப்பூசிகள் இல்லை பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்ததாகவும் ஹர்டி குறிப்பிட்டுள்ளார்.

சில நாடுகள் கொவிஷீல்டை அங்கீகரிப்பதாக கடந்த மாதம் தெரிவித்தாலும் பிரபல சுற்றுலா பகுதியான மோல்டா இதில் உள்ளடங்கவில்லை.

அச்சமின்றி பயணிப்பதறகு பிரித்தானியாவில் அனுமதி நாடுகள் பட்டியலில் மோல்டாவும் உள்ளது.

இதேவேளை கொவிஷீல்டை பெற்றுக்கொண்ட பிரித்தானியர்களுக்கான பயணத்திற்கு தடை விதிக்கக்கூடாது என பிரித்தானிய போக்குவரத்து துறை செயலாளர் கிரான்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டமை சரியான விடயமல்ல என்றும் இவ்வாறு நடந்திருக்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து மோல்டா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!