சுவிஸ்லாந்தில் வசிக்கும் நபர் மீது யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர் புகார்..!

Nila
4 years ago
சுவிஸ்லாந்தில் வசிக்கும் நபர் மீது யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர் புகார்..!

சுவிஸ்லாந்தில் வசிக்கும் 57 வயதான யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்டநபரிடம் அவசர தேவை நிமிர்த்தம் பணம் வாங்கியதாகவும் , யாழை சேர்ந்த 29 வயது இளம்ஆசிரியை ஒருவர் , தற்போது அவரது தொல்லையால் பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

மேலும் குறித்தஆசிரியை வட்சப் குறுாப் ஒன்றில் இணைந்திருந்ததாகவும் அந்த குறுாப்பில் இருந்த சுவிஸ் நபர் போடும் பதிவுகளை ஆசிரியை வாசித்து அதற்கு கருத்துக்கள் பதிவிட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.

எனினும் அதன் பின்னர் அவர் ஆசிரியையை தனி அழைப்பில் தொடர்பு கொண்டு நட்பாக இருந்ததாகவும் பொலிசாருக்கு ஆசிரியை கூறியுள்ளார். அத்துடன் இந்த நட்பின் வெளிப்பாடாக ஆசிரியைக்கு மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்குவதற்கு குறித்த சுவிஸ் வாழ் நபர் பணம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது

அதன் பின்னரே அவரது தகாத எண்ணம் வெளியாகத் தொடங்கியுள்ளதுடன் அவர் இலங்கைக்கு வரவும் ஆயத்தமாகியுள்ளார். இதனையடுத்து அவரின் தொடர்பை துண்டிக்க குறித்த ஆசிரியை முற்பட்டுள்ளார்.

மேலும் அவருடன் தொடர்பு துண்டிக்கபடடதால் இருவருக்கும் மோதல் உண்டாகி தற்போது பொலிஸ் நிலையம் வரை வந்துள்ளது..

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!