சிகிச்சைபெற்று வந்த கொரோனா நோயாளி தப்பியோட்டம்
Nila
4 years ago
பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் தப்பியோடியுள்ளார் என்று பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
கொஸ்ஹேன்கம, ஹேவாஹின்ன, அவிசாவளை என்ற முகவரியில் வசிக்கும் நந்தசிறி போவத்த என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
சபரகமுவ பல்கலைக்கழகத்திலுள்ள சிங்கராஜ இடைத்தங்கல் கொவிட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு இன்றைதினம் மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே அவர், வைத்தியசாலையிலிருந்து தப்பியுள்ளார் என வைத்தியசாலைப் பொலிஸாரால் பலாங்கொடை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தப்பிய நோயாளி தொடர்பான விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.