இலங்கையில் நீர்வீழ்ச்சி ஒன்றில் திடீரென இராவணன் முகம் தோன்றியதா?

Nila
4 years ago
இலங்கையில் நீர்வீழ்ச்சி ஒன்றில் திடீரென இராவணன் முகம் தோன்றியதா?

பண்டாரவளை, எல்ல பகுதியில் அமைந்துள்ள ராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அண்மித்த பகுதியிலுள்ள பாரிய கற்பாறையில் திடீரென முகமொன்று தோன்றியுள்ளது.

இந்த நிலையில் இது சிறந்த சிவ பக்தனான இராவணன் மன்னனுடைய முகமாக இருக்ககூடும் என பிரதேச மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். குறித்த கற்பாறையிலுள்ள ஒரு பகுதி இயற்கையாகவே உடைந்து விழுந்ததன்பின்னரே அந்த முகம் தோற்றியுள்ளது.

இப்பகுதியிலேயே இராணவன் புஷ்பக விமானத்தை நிறுத்தியுள்ளார் எனவும், அண்மித்த பகுதியிலுள்ள குகையிலேயே சீதையை மறைத்து வைத்திருந்தார் எனவும் அப்பகுதியிலுள்ள மக்கள் புராணக் கதைகளை மேற்கோள்காட்டி கருத்து வெளியிட்டுவருகின்றனர்.

 இதனையடுத்து அப் அப்பகுதியை பார்வையிடுவதற்கு பெருமளவானோர் வருகை தருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, ராமாயணம் என்பது கட்டுக்கதையெனவும் இராவணன் என்பவர் இலங்கையை ஆண்டதற்கான எந்தவொரு சான்றும் இல்லையென தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!