பொலன்நறுவ - ஹபரண வீதியில் பயங்கர விபத்து
Nila
4 years ago
பொலன்நறுவ - ஹபரண பிரதான வீதியில் மின்னேரிய வட்டுஓய பிரதேசத்தில் இன்று காலை வாகன விபத்தொன்று இடம்பெறற்றுள்ளது.
புத்தளத்தில் இருந்து மட்டக்களப்பு ஓட்டமாவடியை நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமமைந்த 4 பேர் பொலன்நறுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமமைந்தவர்கள் புத்தளம் மணல்குண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்
காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.