உலக நாடுகளில் 5வது இடத்தை பிடித்துள்ள இலங்கை! - ஆய்வுகளை மேற்கொள்ளத் தீர்மானம்...

Nila
4 years ago
உலக நாடுகளில் 5வது இடத்தை பிடித்துள்ள இலங்கை! - ஆய்வுகளை மேற்கொள்ளத் தீர்மானம்...

சமுத்திரத்திற்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களை கொட்டும் உலக நாடுகளில் இலங்கை 5 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக சர்வதேச அமைப்புக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராயுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனையை சுற்றாடல்துறை அமைச்சர் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு வழங்கியுள்ளார்.

இலங்கையில் நாள் ஒன்றுக்கு 5.1 கிலோ கிராம் தனிநபர் கழிவுகள் கொட்டப்படுவதாக அந்த ஆய்வறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நாட்டில் தனிநபர் ஒருவரால் நாள் ஒன்றில் 500 கிராம் கழிவுகளே வெளியேற்றப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு சர்வதேச அமைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டும் என சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!