கன்னி ராசியினருக்கு வீண் பிரச்சனைகள் தேடி வரும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 week ago
கன்னி ராசியினருக்கு வீண் பிரச்சனைகள் தேடி வரும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நேற்றைய பிரச்சினைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பரணி: குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கார்த்திகை 1: பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.ரோகிணி: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.மிருகசீரிடம் 1,2: செயல்களில் ஆதாயம் தோன்றும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீண்ட நாள் முயற்சி இன்று நடந்தேறும். நண்பர்கள் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.திருவாதிரை: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆதாயம் தரும். அரசியல் வாதிகளின் எண்ணம் நிறைவேறும்.புனர்பூசம் 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவால் முயற்சி நிறைவேறும்.பூசம்: தடைபட்டிருந்த செயல்கள் மீண்டும் தொடரும். இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். ஆயில்யம்: உங்கள் பேச்சாற்றலால் ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் புகழ் உயரும்.

சிம்மம்

மகம்: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மைகள் ஏற்படும். நட்பு வட்டம் விரிவடையும். பூரம்: அரசியல் வாதிகளின் ஆலோசனைக்கு மதிப்பேற்படும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். உத்திரம் 1: உங்கள் மனம் காட்டும் வழியில் செயல்படுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வரவு செலவில் நெருக்கடி ஏற்படும். உங்கள் எதிர்பார்ப்பில் தடையுண்டாகும்.அஸ்தம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர்கள்.சித்திரை 1,2: குடும்பத் தேவையை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு கரையும். சிலருக்கு வீண் பிரச்னை தேடிவரும்.

துலாம்

சித்திரை 3,4: செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். உங்கள் உதவியை எதிர்பார்த்து சிலர் உங்களை சந்திப்பர். சுவாதி: லாபமான முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.விசாகம் 1,2,3: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். உறவினர்கள் உங்களது வீடு தேடி வருவார்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் முயற்சி வெற்றி அடையும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.அனுஷம்: நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உங்களது முயற்சியில் அனுகூலம் உண்டாகும்.கேட்டை: குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் உங்கள் செயலில் லாபம் அடைவீர்கள். நட்பு வட்டம் விரியும்.

தனுசு

மூலம்: கடந்த கால அனுபவத்தைக் கொண்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.பூராடம்: தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பேற்படும். உத்திராடம் 1: மற்றவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். செயலில் சங்கடம் தோன்றும். கவனம் தேவை. திருவோணம்: தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். மனதில் குழப்பம் தோன்றும். அவிட்டம் 1,2: வீண் சச்சரவுகள் உங்களைத் தேடிவரும். அரசியல் வாதிகளுக்கு நெருக்கடிகள் தோன்றும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வரவு அதிகரிக்கும்.சதயம்: தம்பதிகளுக்குள் உண்டான பிரச்னைகள் விலகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பூரட்டாதி 1,2,3: செயல்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். மறைமுக எதிரிகள் விலகிச்செல்வார்கள். உத்திரட்டாதி: உங்கள் செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். ரேவதி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பணத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.