சுகாதார சேவையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் : ஜனாதிபதி விடுத்துள்ள பகிரங்க அழைப்பு!

#SriLanka #Ranil wickremesinghe #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
சுகாதார சேவையில் ஏற்படுத்த வேண்டிய  மாற்றங்கள் : ஜனாதிபதி விடுத்துள்ள பகிரங்க அழைப்பு!

நவீன மருத்துவ சேவைகளுக்கு ஏற்ற வகையில் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு இந்த நாட்டில் சுகாதார சேவையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் பரந்துபட்ட கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

 இலங்கையில் காலனித்துவ காலத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட இலவச மருத்துவ முறைமை காணப்படுவதாகவும், அதனை முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அந்த கடந்த கால அனுபவங்களுடன் நாட்டில் தரமான மற்றும் உயர்தர சுகாதார சேவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.

 அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதேவேளை நாடளாவிய ரீதியில் நிலவிய மருந்து தட்டுப்பாடு படிப்படியாக நீங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் நிபுணர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். 

 நிபுணர் கலாநிதி பாலித மஹிபால, பொதுக் கணக்குகள் தொடர்பான குழுவில் இணைந்துகொண்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.